×

மலைவாழ் மக்கள் பகுதிகளில் செல்போன் டவர் அமைக்க நடவடிக்கை திமுக வேட்பாளர் ரேகா பிரியதர்ஷினி உறுதி

கெங்கவல்லி, மார்ச் 23: கெங்கவல்லி தொகுதி திமுக வேட்பாளர் ரேகா பிரியதர்ஷினி, கெங்கவல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒதியத்தூர், 74.கிருஷ்ணாபுரம், 95 பேளூர், மண்மலை, பாலக்காடு ஊராட்சிகள் மற்றும் செந்தாரப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். பின்னர் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவரை அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். முன்னதா கெங்கவல்லி கிறிஸ்தவ ஆலய பாரதியாரிடம் ரேகா பிரியதர்ஷினி ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசுகையில், ‘கடம்பூர் ஊராட்சியில் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில், மாணவர்கள் ஆன்லைன் வகுப்புக்காக செல்போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்குதல், கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் பஸ் வசதி, பேளூர் ஊராட்சியில் தனியார் வங்கி, செந்தாரப்பட்டி பேரூராட்சியில் மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பேன். திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் படிப்படியாக பணிகள் மேற்கொள்ள அயராது பாடுபடுவேன்,’ என்றார். பிரசாரத்தின் போது, ஒன்றிய பொறுப்பாளர் அகிலன், முன்னாள் ஒன்றிய செயலாளர் காமராஜ், சித்தார்த்தன், ஷேக் மொய்தீன், ராமசாமி, செல்வம், விசிக முத்து, பாலமுருகன், செந்தாரப்பட்டி முருகேசன், கம்யூனிஸ்ட் ஜோதிகுமார், தமிழக வாழ்வுரிமை கட்சி லோகு மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




Tags : DMK ,Rekha Priyadarshini ,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு